வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் பிரசாந்த். டாப் இயக்குநர்களான பாலு மகேந்திரா, மணிரத்னம், சங்கர் போன்றவர்களின் திரைப்படங்களின் நடித்துள்ளார். இவரது சினிமா கெரியரில் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, வின்னர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
அந்த வகையில், இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ், முக்கிய இடத்தினை பிடித்துள்ளது. அப்போதே நம்பமுடியாத கிராபிக்ஸ் காட்சிகள், உலக அழகி ஐஸ்வர்யாராய், இரட்டை வேடம், உலக அதிசயங்கள் அடங்கிய பாடல் என படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்து வெற்றிக்கனியை எட்டியிருந்தது.
ஜீன்ஸ் படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களின் முக்கிய இடத்தை பிடித்திருந்தார் நடிகர் பிரசாந்த். இன்றைய தலைமுறையின் தல, தளபதியெல்லாம் அப்போது பிரசாந்த் என்ற நடிகருக்கு பின்வரிசையில் இருந்தவர்கள் என்றுக்கூட சொல்வார்கள். அப்படி தமிழ் சினிமாவில் வலம் வரத்தொடங்கி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை 2005-ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரசாந்த். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தத் திருமணம் வெகு விரைவிலேயே விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் பிரசாந்த் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் பொன்னர் சங்கர் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். கடைசியாக வெளியான மம்பட்டியான் உள்ளிட்ட அவரது படங்கள் பெரிதாக ஹிட் அடிக்காததால், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
ராம் சரண் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் தான் ‘வினய விதய ராமா’. இந்த திரைப்படத்தில் கண்ட தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்த போயினர். அதற்கு காரணம் மனதில் பதியாத கதாபாத்திரத்தில் நடித்தது தான் . ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருந்த பிரசாந்துக்கு இந்த நிலைமையா என சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அப்பா தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த். இன்று பிரசாந்தின் 49வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சிம்ரன் பிரஷாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். மீண்டும் தமிழ் சினிமாவில் எப்போது ரீ என்ட்ரி கொடுப்பார் என்பதே அவரது ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.