தைரியம் இருந்தால் 2026 தேர்தலில் திமுக தனித்து நிற்குமா? முன்னாள் அமைச்சர் சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2025, 11:23 am

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட கலைப் பிரிவு மற்றும் கிழக்கு ஒன்றிய சார்பில் எம்ஜிஆர் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசுகையில், எம்ஜிஆர் அதிமுகவை துவங்கவில்லை என்றால் இன்றைக்கு தமிழகமே இருந்திருக்காது. கொள்ளையடிப்பது ஒரு கலை என்று திரைப்படத்தில் கூறியதை நிரூபித்து காட்டியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

இதையும் படியுங்க: திருநங்கைகள் தொல்லை தாங்க முடியல… கதறும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் திமுக. கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்துள்ளனர். 2ஜி ஊழல் வழக்கினை பற்றி உலகமே பேசியது அப்படிப்பட்ட வரலாறு திமுகவுக்கு உள்ளது. பகல் வந்தால் இரவு வரும், பௌர்ணமி வந்தால் அம்மாவாசை வரும்.

அதே போன்று தான் நல்ல ஆட்சி இருக்கும் போது ஒரு கெட்ட ஆட்சி வந்தா தான் நல்ல ஆட்சியின் அருமை தெரியும். அதற்காக அவ்வப்போது திமுகவை மக்கள் ஆட்சியில் அமர வைக்கின்றனர்.

Kadambur Raju

சட்டமன்றத் தேர்தலில் 520 வாக்குறுதிகளை கொடுத்து திமுக மக்களை ஏமாற்றி உள்ளது. விடியல் ஆட்சி என்று கூறும் திமுக அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா ? தமிழக மக்கள் நன்றியுள்ள மக்கள் என்பதை நிரூபிக்கக் கூடிய தேர்தல் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்.

ஏழை, எளிய மக்களுக்கு பயன்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது. மக்கள் விரும்பவில்லை என்பதால் நிறுத்திவிட்டதாக அந்த துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகிறார் .திமுக தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் தங்கம் மற்றும் பணத்தினை உயர்த்தி வழங்குவதாக கூறியிருந்தனர்.

EX minister Challenge to DMK

ஆனால் அதை செய்யவில்லை. தாலி கொடுத்தது அதிமுக – தாலியை அறுத்தது திமுக என்றும் தாலி இங்கே தங்கம் எங்கே என்று பேசி ஓட்டு வாங்கிய திமுக தான் இன்றைக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்