வடமாநிலங்களில் தென் மாநில மொழியை மூன்றாவது மொழியாக சேர்க்க ஆளுநர் முன்வருவாரா? அமைச்சர் பொன்முடி கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 12:55 pm

தமிழகத்தில் கல்லூரிகள் 1 ஆம் தேதி முதல் திறக்கபடுவதால் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

வரும் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்றும் செய்முறை தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளதால் இதில் மாணவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தேர்வுகள் இல்லாத நாளில் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் எனவும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும் தான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவதால் இருமொழி கொள்கை தான் பின்பற்றுவதில் தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியாக உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்தார்.

வேண்டுமென்றால் மாணவர்கள் மூன்றாவது மொழியினை தேர்வு செய்து விருப்ப பாடமாக படிக்கலாம் என கூறினார். மும்மொழி கொள்கையை பின்பற்ற கூறும் மத்திய அரசு மூன்றாவது மொழியாக வடமாநிலங்களில் தென் மாநிலங்களின் மொழியை பயிற்றுவிக்க ஆளுநர் முன் வருவாரா என்ற கேள்வியை அமைச்சர் பொன்முடி எழுப்பினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!