பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பா.ம.க… கூட்டணியில் இருந்து விலகலா? ராமதாஸ் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2023, 8:06 pm

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பா.ம.க… கூட்டணியில் இருந்து விலகலா? ராமதாஸ் பரபரப்பு பேச்சு!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின்- 35 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் பாமக கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்ககும் தொண்டர்களுக்கும் இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

அதன்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தமிழகத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க கோரி தமிழக முதல்வரிடம் நான்கு முறை தொலைபேசியில் பேசி உள்ளேன்.

10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பாமகவும் தமிழக அரசும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கடவுள் என்னிடம் வந்து எண்ணம் வர வேண்டும் என்று கேட்டால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக மாற வேண்டும்.

ஒரு சொட்டு மழைநீர் கூட கடலில் கலக்கக்கூடாது என இரண்டு வரங்களை கடவுளிடம் வரமாக கேட்பேன் தெரிவித்தார் மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை பாமக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

Svg%3E

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது கூறினார் மேலும் இந்நாளில் பாட்டாளி மக்கள் தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Svg%3E