சேலம், நாமக்கல்லில் அடிக்காத வெயில் நீலகிரியில் அடிக்குமா? ஸ்ட்ராங் ரூம் கேமரா செயலிழப்பு.. எல். முருகன் DOUBT!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2024, 1:16 pm

சேலம், நாமக்கல்லில் அடிக்காத வெயில் நீலகிரியில் அடிக்குமா? ஸ்ட்ராங் ரூம் கேமரா செயலிழப்பு.. எல். முருகன் DOUBT!

சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வரும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் மேட்டுப்பாளையம் சென்றார். இதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த எல்.முருகன் நேற்று நீலகிரி ஸ்டார்ங்ரூம் (strong room) கேமரா திரை 20 நிமிடம் நின்று விட்டது.

தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுகள் வராமல பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்கிறது.

கால சூழ்நிலை என சொல்கிறார்கள், கால சூழ்நிலை வரும் என்பது குறித்து தெரியும், சேலம், நாமக்கலில் இல்லாத வெயில் இங்கொன்றும் இல்லை எந்த காரணம் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றார்.

எந்தவித ஐயமும் இல்லாதவாரு தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும் என்றவர், பல இடங்களில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு உள்ளது இதில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் பாஜகவுக்கு வாக்காளர்களின் விடுபட்டுள்ளது என குற்றம் சாட்டியவர் நீலகிரி, கோவை, தென் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நீக்கப்பற்றிப்பது திமுகவின் தோல்வியை மறைப்பதற்காக அவர்கள் எங்களுடைய வாக்காளர்களை நீக்கி இருக்கிறார்கள் என்றார்.

வாக்குபதிவு இயந்திரம் குறித்த காங்கிரஸின் குற்றச்சாட்டிற்கு பதிலத்த எல்.முருகன் வாக்குப்பதிவு இயந்திரம் (Evm machine)ல் எதுவும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கி இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டவர் காங்கிரஸ் இன்டி கூட்டணியினர் தோல்வி பயத்தில் இதனை சொல்கிறார்கள் என்றார்.

அயோத்தியில் உள்ள மக்கள் ஒவ்வொருவருடைய எண்ணம் ராமர் கோயில் வேண்டும், 500 ஆண்டுகள் போராட்டம் முடிவுக்கு வந்து அங்கே தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது என்றவர் இந்தியர்களின் ஒவ்வொருவரின் கனவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது அனைவரும் சென்று வழிபடுகிறார்கள் என்றார்.

வழிபாடு செல்லவில்லை ராகுல் கூறுவது எதை காட்டுகிறது என்றால் ராமரை வெறுக்கிறாரா? அல்லது இந்து மதத்தை வெறுக்கிறாரா? அல்லது கடவுள்களை வெறுக்கிறாரா? என்பதை தான் காட்டுகிறது என்றார்.

  • GBU song puli puli popularity disturbed the singer darkkey sleep GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey