அண்ணாமலை மூஞ்சிய பார்த்தா நம்பிக்கை வருமா? விமர்சனம் செய்த எஸ்வி சேகர்… பாயும் அதிரடி நடவடிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2023, 7:34 pm

தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர் அண்மையில் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில் பேசிய எஸ்வி சேகர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“அவர் உளறுவது ரொம்ப மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. ஒரு எம்.எல்.ஏ. சீட்டையே வெற்றிபெற முடியாத ஒருவர், இத்தனை பண வசதியும், இத்தனை ஆளு பலம் கொடுத்தும் ஜெயிக்க முடியவில்லை என்றால் அது முக ராசி. இந்த மூஞ்சியை பார்த்ததும் எதுக்குடா இதுக்குலாம் போடனும். ஏன்னா அதுக்குதான் ஊர்வலம் போறாங்க. எம்.எல்.ஏ., எம்.பி தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏன் ஊர்வலம் போகிறார்கள்? அந்த மூஞ்சி ஒரு நம்பிக்கை கொடுக்கும். அண்ணாமலையின் மூஞ்சி நம்பிக்கை கொடுக்கும் மூஞ்சியாக இல்லை.” என்று எஸ்வி சேகர் பேசி இருந்தார்.

இதுதான் பாஜகவினரை கொதிப்படைய செய்து இருக்கிறது. இந்த நிலையில் அந்த வீடியோவை ட்விட்டரில் ரீட்வீட் செய்துள்ள பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, எஸ்வி சேகர் மீது கட்சி சட்ட விதிகளின்படி அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவையும் பலர் பகிர்ந்து வருகிறார்கள். அந்த பதிவில், “திரு அண்ணாமலை அவர்களே, இனியும் இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. கட்சியை விட்டே இந்த நபரை நீக்க வேண்டும். பாஜகவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒழுக்கத்தை மீறியதற்காக அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும்.”என்று அமர் பிரசாத் வலியுறுத்தி இருக்கிறார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!