பிரசவம் ஆகி 10 நாட்களுக்குள்.. கைக்குழந்தையுடன் உடல்தகுதி தேர்வுக்கு வந்த இளம்பெண் : குவியும் சல்யூட்!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2024, 6:59 pm

பிரசவம் ஆகி 10 நாட்களுக்குள்.. கைக்குழந்தையுடன் உடல்தகுதி தேர்வுக்கு வந்த இளம்பெண் : குவியும் சல்யூட்!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண், பெண் இருபாலரும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் குழந்தை பிறந்து பத்து நாட்களேஆன நிலையில் தனது கைக்குழந்தையுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் கோவையில் நடைபெறுகின்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வுக்கு ஆவலுடன் கலந்துகொண்டார்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!