மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம் : புதுச்சேரியில் இணைந்து தொடங்கி வைத்த முதலமைச்சர் மற்றும் ஆளுநர்!!

Author: Babu Lakshmanan
23 January 2023, 10:03 pm

புதுச்சேரி ; புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இணைந்து தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் வறுமை கோர்ட்டிற்கு கீழ், உள்ள ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்துக்கான துவக்க விழா இன்று மாலை 6 மணிக்கு கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்தத் திட்டத்தை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தில் 70 ஆயிரம் பெண்கள் உதவித்தொகை பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதனால், அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ