வீடு புகுந்து மிரட்டிய முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் வழக்கறிஞரை வீடியோ வெளியிட்டுள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அகிலா தேவி குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவருடைய கணவர் முத்தழகன் என்பவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ஜினித் என்பவருக்கு தமிழக அரசின் டாஸ்மார்க் பார் நடத்துவதற்கு கடை ஒன்றை வாடகைக்கு எடுப்பதற்க்காக ஒரு லட்சம் ருபாயை வாங்கி கருங்கல் பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜினித்துக்கு பார் நடத்த அனுமதி கிடைக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் முன் பணமாக வாங்கிய பணத்தை மூன்று வருடங்கள் கழித்து தருவதாக கூறி உள்ளார்.
இதற்கிடையே ஜினித்திற்கு அறிமுகமான முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜின் சகோதரர் ஜெயன் தங்கராஜ் முத்தழகனிடம் பணத்தை திரும்ப கொடுக்க கேட்டு மிரட்டி உள்ளார்.
இதற்கிடையே கடந்த ஒருசில மாதங்களுக்கு முன் முத்தழகன் நண்பர் பென்சாம் என்பவரை கடத்தி வைத்துள்ளதாக கூறியதையடுத்து முத்தழகனை தூக்கப்போவதாக மிரட்டி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் ஜெயன் தங்கராஜ் முத்தழகனின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி உள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரையும் தாக்கி உள்ளார் இது குறித்து பெண் வழக்கறிஞர் அகிலா தேவி 100 க்கு அழைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதையும் படியுங்க: மாயமான மாணவி… ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு கடத்தி உல்லாசம் : பாய்ந்தது போக்சோ!
தகவலறிந்து வந்த போலீசார் அங்கிருந்து ஜெயன் தங்கராஜை காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.
இதனை நம்பி பின்னால் கணவருடன் வழக்கறிஞர் காவல்நிலையம் சென்றபோது அங்கு ஜெயன் தங்கராஜ் இல்லை. அவரை போலீசார் வரும் வழியிலேயே எந்த விசாரணையும் செய்யாமல் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் தனக்கு நீதி வேண்டும் என்று பெண் வழக்கறிஞர் காவல்நிலையம் முன் காத்திருந்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிஎஸ்கே-க்கு ஆதரவு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்,உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லைஃப்' திரைப்படக்குழு சென்னை சூப்பர்…
'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் மாற்றம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா,இந்திய அளவிலும் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார்.கடந்த…
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் – சி.பி.ஐ. இறுதி அறிக்கை! பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்…
அனிருத் இசைக்கச்சேரி ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கியது.இந்த சீசனில் நேற்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட்…
தனுஷ் – அஜித் கூட்டணி நடிகர் அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார்.இந்த படம்…
தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் தெலுங்கு திரையுலகில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள "ராபின் ஹுட்" திரைப்படம் மிகுந்த…
This website uses cookies.