துணை முதலமைச்சரை பார்க்க நிர்வாணமாக சென்ற பெண் அகோரி.. திகைத்து நின்ற தொண்டர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2024, 1:44 pm

துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்திக்க அவருடைய கட்சி அலுவலகத்திற்கு நிர்வாணமாக சென்ற அகோரினி நாகசாது.

அகோரினி நாக சாது. இவர் இப்போது ஆந்திராவில் மிகவும் பிரபலம். எப்படி என்றால் எங்கு சென்றாலும் நிர்வாணமாக காரில் சென்று காட்சியளிப்பது, கோவில்களுக்கு செல்வது என்று பரபரப்புகளை பஞ்சமில்லாமல் ஏற்படுத்தி வருகிறார் நாகசாது.

ஒரு வாரத்திற்கு முன் காளஹஸ்தி கோவிலுக்கும் அதேபோல் நிர்வாணமாக வந்த நாகசாதுவை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து அவருக்கு ஆடை அணிவித்து கோவிலுக்குள் அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்க: ஆப்ரேஷன் தியேட்டரில் கிட்டார்.. பெங்களூரு மருத்துவமனையில் அதிசயம்

இந்த நிலையில் இன்று விஜயவாடாவில் ஜனசேனா கட்சி அலுவலகம் இருக்கும் பகுதிக்கு நிர்வாணமாக சென்ற நாகசாது தான் துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்திக்க வந்திருப்பதாக கூறினார்.

aghori went to meet Pawan Kalyan in nakee

ஆனால் துணை முதல்வர் இங்கு இல்லை. அவரை இப்போது சந்திக்க இயலாது என்று பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தி எடுத்துக் கூறியும் அவர் கேட்காமல் நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்த ஆரம்பித்து விட்டார்.

எனவே போலீசாரும்,ஜனசேனா கட்சி தொண்டர்களும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 161

    0

    0