கோவையில் இருந்து திருச்சி சென்ற பெண் பயணியிடம் ரூ.500 லஞ்சம் கேட்டதற்கு மறுத்ததால் அவரை நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்ற நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி: திருச்சியில் உள்ள கல்லணை பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா. இவர் கணவரை இழந்த நிலையில், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கல்லணை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகள்களுக்கு துணி, பலகாரம் வாங்கிவிட்டு, சொந்த ஊர் வருவதற்கு கோவையில் இருந்து திருச்சி பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டு உள்ளார். அப்போது, அந்தப் பேருந்தின் நடத்துனர், பெண் வைத்திருந்த கட்டைப்பைக்கு ரூ.500 லஞ்சமாக கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தன்னுடைய பயணச்சீட்டு 160 ரூபாய் தான், அதே கட்டணத்தை தருகிறேன், இன்னொரு பயணச்சீட்டு வேண்டுமானாலும் கொடுங்கள் என ஷர்மிளா கூறியதாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நடத்துனர், அப்பெண்ணை நடுவழியிலே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பின்னால் வந்த மற்றொரு திருச்சி பேருந்தில் ஷர்மிளா ஏறியுள்ளார். இதனையடுத்து, அப்பெண்ணை முதலில் இறக்கி விட்ட பேருந்து உணவு நிறுத்துமிடத்தில் இருந்துள்ளது. அங்கு இரண்டு பேருந்து நடத்துனர்களும் சந்தித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஃபேர்வெல் கொண்டாடிய மாணவிகளின் மேலாடையைக் கழற்றச் சொன்ன பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்!
பின்னர், பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், அப்பெண்ணிடம் மற்றொரு பேருந்தின் நடத்துனரும் ரூ.500 லஞ்சம் கேட்டு, அதற்கு ஷர்மிளா தர மறுக்க, ஆட்கள் இல்லாத இடத்தில், நடுவழியில் இறக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணீருடன் காத்திருந்த பெண்ணுக்கு, காரில் சென்றவர்கள் உதவியுள்ளனர்.
மேலும், அவரை கரூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டவர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எதிராக புகாரும் பதிவு செய்துள்ளனர். எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண் உள்பட இது குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.