சுரேஷுக்காக சுந்தரி போட்ட ப்ளான்.. கள்ளத்தொடர்புக்கு இடையூறு செய்த கள்ள உறவு.. என்ன நடந்தது?
Author: Hariharasudhan24 March 2025, 11:07 am
சிவகாசி அருகே, கள்ளத்தொடர்பில் இருந்த பெண் போட்ட திட்டத்தின்படி, ரவுடி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் (27). இவர் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், சுந்தரி என்ற பெண்ணுடன் சுரேஷ் பழகி வந்துள்ளார். சுந்தரி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சுரேஷுடன் உறவான பிறகு, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
எனவே, சுந்தரி வீட்டில்தான் சுரேஷும் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் 16ஆம் தேதி சுந்தரி வீட்டில் தங்கியிருந்த சுரேஷை, 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது.பின்னர், இது குறித்து மாரனேரி போலீசார் விசாரணை நடத்தியபோது, சுரேஷ் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கடந்த மார்ச்சில் குணசேகரன் என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைதாகி, சமீபத்தில்தான் சுரேஷ் ஜாமீனில் வெளிவந்துள்ளார். எனவே, குணசேகரனைக் கொன்றதற்கு பழிக்குப் பழியாகவே அவரது தம்பி மதனகோபால் சுரேஷைக் கொலை செய்திருப்பதும் உறுதியாகியுள்ளது. இதற்காக, சுரேஷ் ஜாமீனில் வெளியெ வரும்வரை காத்திருந்துள்ளனர்.
இறுதியில், மதனகோபால், அவரது நண்பர்களான தனசேகரன், சூர்யபிரகாஷ், தருண், முத்துப்பாண்டி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணையில், சுரேஷின் ரகசிய காதலி சுந்தரியும், சுந்தரியின் ஆண் நண்பர் வேலுச்சாமியும், சுரேஷைக் கொலை செய்வதற்கு உதவியுள்ளனர்.
இதனையடுத்து, சுந்தரி, வேலுச்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், சுந்தரியிடம் மேற்கொண்ட விசாரணையில், சுந்தரிக்கு ரவுடி சுரேஷ் மட்டுமின்றி, கைதான வேலுச்சாமி, தருண் உள்ளிட்டோருடனும் தொடர்பு இருந்துள்ளது. இந்த கள்ளத்தொடர்பு தெரிந்து சுரேஷ் சுந்தரியைக் கண்டித்துள்ளார். இதனால், உறவுக்கு இடையூறாக இருந்த சுரேஷைக் கொலை செய்ய சுந்தரி திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, மதனகோபால் கும்பலுடன், வேலுச்சாமியை நெருங்கி பழக விட்டுள்ளார் சுந்தரி. தன்னுடைய வீட்டிற்கு சுரேஷ் வருவது பற்றி தகவல் தந்து, அதற்கான நாளையும் குறித்துத் தந்துள்ளார் சுந்தரி. இதன்படி, சம்பவத்தன்று சுரேஷ் மதுபோதையில் சுந்தரியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: தொடர் வீழ்ச்சி காணும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
எனவே, இன்ஸ்டாகிராம் மூலம் தருண், வேலுச்சாமிக்கு சுந்தரி மெசேஜ் அனுப்பியுள்ளார். இதைனையடுத்துதான், மதனகோபால் கும்பல், ஆயுதங்களுடன் வந்து போதையில் இருந்த சுரேஷை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.