ஆசையாக அழைத்த பெண்.. உள்ளே போனதும் லாக்.. திருப்பூரில் திகைத்த இளைஞர்!
Author: Hariharasudhan27 March 2025, 5:53 pm
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் குமார் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து வழக்கம்போல் பேசியுள்ளார்.
அப்போது, தான் தனது நண்பருடன் இருக்கிறேன் என்றும், நீங்களும் வந்தால் ஜாலியாக இருக்கலாம் எனவும் கொஞ்சலாய் அழைத்துள்ளார் அந்தப் பெண். இந்தக் குரலில் தத்தளித்த குமார், எங்கே வர வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு, நான் சின்னியகவுண்டம்பாளையத்தில் இருக்கேன் எனக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
ஆனால், அந்த அழைப்பை மீண்டும் இணைக்க, குமார் அப்பெண் கூறிய வீட்டிற்குச் சென்றுள்ளார். இவ்வாறு வீட்டிற்குள் சென்றதும் அந்தப் பெண் கதவை அடைத்துள்ளார். பின்னர் அடுத்த நொடியில், முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள், கத்தியுடன் குமாரை நெருங்கியுள்ளனர்.

தொடர்ந்து, அவர் அணிந்திருந்த நகைகள், கையில் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டுச் செல், இல்லையென்றால் செத்துவிடு என கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட உயிர் பயத்தில், தான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயின், அரை பவுன் மோதிரம் மற்றும் 3,500 ரூபாய் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வில்லனாக நடிப்பாரா விஜய்சேதுபதி…கொக்கி போடும் வில்லங்கமான இயக்குனர்.!
பின்னர், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. இதனையடுத்து, இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீசார், ராயர்பாளையத்தைச் சேர்ந்த தினகரன் (45), அம்மா பாளையத்தைச் சேர்ந்த ராஜதுரை (24), ஜே.கே.ஜே. காலனியை சேர்ந்த பரத் (22), மேற்கு பல்லடத்தை சேர்ந்த துரைராஜ் (29) மற்றும் அதே பகுதியைச் குமார் (29), இவர்களுக்கு உறுதுணையாக இருந்த திருச்சியைச் சேர்ந்த தேவி (40) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.