மாமியார் வீட்டில் 58 பவுன் நகையை திருடி விட்டு நாடகம்… கைகாட்டிய 5 வயது மகன் ; வசமாக சிக்கிய அக்கா, தங்கை…!!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 12:55 pm

மாமியார் வீட்டில் 58 பவுன் நகையை திருடி விட்டு நாடகம்… கைகாட்டிய 5 வயது மகன் ; வசமாக சிக்கிய அக்கா, தங்கை…!!!

தூத்துக்குடியில் வியாபாரி வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து மாமியார், மருமகளை கத்தி முனையில் மிரட்டி 58 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக மருமகள் நடத்திய நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் அற்புதராஜ் (65). இவரது மனைவி ஜெயராணி. அற்புதராஜ் தூத்துக்குடி ஸ்பிக் நகர் பஜாரில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி மூத்த மகன் தங்கதுரை (38) சென்னையிலும், இளைய மகன் ஜான் செல்வசீனி (35) தஞ்சாவூரிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தங்கதுரை குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர், தனது மனைவி அஸ்வினி (35) மற்றும் 5 வயது மகனை தூத்துக்குடியில் அப்பா வீட்டில் விட்டு விட்டு மீண்டும் சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி மாலை அற்புதராஜ் கடைக்கு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்டு அறிந்து கொண்டு பர்தா அணிந்து வந்த ஒருவர் உட்பட 2 மர்ம நபர்கள் இரவில் அவரது வீட்டுக்குள் சென்றுள்ளனர். வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த அற்புதராஜின் மனைவி ஜெயராணி (54) மற்றும் மருமகள் அஸ்வினி (35) ஆகிய 2 பேர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி அவர்களது கழுத்தில் இருந்த செயின் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்தனர்.

மேலும், பீரோவை திறக்கச் சொல்லி அதில் இருந்த மூக்குத்தி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட சுமார் 58 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்தனர். தொடர்ந்து மாமியார், மருமகள் இருவரையும் அவர்களது துப்பட்டாவை வைத்து கட்டிப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது தொடர்பாக தகவலறிந்ததும் இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? பர்தா அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேருக்கு மட்டும் தொடர்பு உண்டா? அல்லது வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா காட்சியுடன் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், மாமியார் இச்சம்பவத்தில் பர்தா அணிந்து ஒரு பெண் மட்டுமே வந்தார் என கூற மருமகள் அஸ்வினி பர்தா அணிந்து வந்த பெண்ணுடன் பேண்ட் சட்டை அணிந்து மற்றொருவர் என 2 பேர் வந்ததாக அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, விசாரணை சந்தேகத்தோடு போலீசார் அணுகினர்.

அஸ்வினியின் 5வயது பையனிடம் நடத்திய விசாரணையில், தன்னை கட்டிபோட்டது மற்றும் வீட்டிற்குள் நுழைந்தது பர்தா அணிந்து வந்த ஒருவர் தான் என கூற, இந்த சம்பவத்தில் மருமகள் அஸ்வினிக்கு தொடர்பு இருப்பதை அறிந்த அவர்கள் அவரது செல்போன் எண்ணை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில், பர்தா அணிந்து வந்த பெண் அஸ்வினியின் அக்கா சுசிலா என தெரியவந்தது. மேலும், இதற்கான முழுதிட்டங்களையும் வகுத்து கொடுத்தது அஸ்வினி தான் என தெரியவர, அவரை முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, தப்பிச்சென்ற அவரது மூத்த சகோதரியான காஞ்சீபுரம் மாவட்டம் மணப்பாக்கம் குன்றத்தூரை சேர்ந்த கோதண்டராமன் மனைவி சுசீலாவை தேடி வந்தனர். கோதண்டராமன் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், போலீசார் தனது மனைவியை தேடுவதை அறிந்த அவர், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சுசிலாவை ஒப்படைத்தார். சுசீலாவிடம் இருந்து 29 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனது அக்காளின் உதவியுடன் தனது சொந்த மாமனார் வீட்டில் நடத்திய திருட்டு நாடகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 446

    0

    0