ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க..உதவி கேட்பது போல் நடித்து இளைஞரிடம் வழிப்பறி : கைதேர்ந்த பெண் களவாணி கைது..!!

Author: Rajesh
20 March 2022, 1:03 pm

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவர் கேபிள் டிவி யில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் கொடுங்கையூர் எம். ஆர் நகர் முதல் குறுக்கு தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இளம் பெண் மற்றும் அவரது நண்பர் இருவரும் எங்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லை என்று கூறி வண்டியை சிறிது நேரம் தள்ள கூறியுள்ளனர்.

உடனே ஆசிக் அவருக்கு உதவி செய்ய முன் வந்தார். அப்போது அந்த இளம்பெண் மற்றும் அவருடன் வந்த நபர்  கத்தியை எடுத்துக் காட்டி ஆசிக்கின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்தனர்.

ஆசிக்கின் வண்டியை அந்த இளைஞரும் மற்றொரு இருசக்கர வாகனத்தை அந்த இளம் பெண்ணும் எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிக் இதுகுறித்து கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே கொடுங்கையூர் பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சில இளம் பெண்களின் புகைப்படத்தை ஆசிக்கிடம் காட்டி சம்பவத்தில் ஈடுபட்டது.

கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த மோனிகா வயது 20 என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த அவரது நண்பர் தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து மோனிகா மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே மோனிகா மீது சில திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1424

    0

    0