கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கத்தியுடன் வந்த பெண்.. அதிகாரிகள் ஷாக் : போலீசார் விசாரணையில் பரபர!!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2024, 2:59 pm
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கத்தியுடன் வந்த பெண்.. அதிகாரிகள் ஷாக் : போலீசார் விசாரணையில் பரபர!!
கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த மரகதவல்லி. இவருக்கு நில தகராறு தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார்.

புகாரின் பேரில் இதுவரை வழக்கு செய்யப்படவில்லை ஆகையால் விரக்தி அடைந்த மரகதவல்லி கையில் கத்தியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வந்தார்.
இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அந்த பெண் சமாதானமாகவில்லை.
தொடர்ந்து காவல்துறையினர் அந்த பெண் வைத்திருந்த கத்தியை பிடுங்கி விட்டு அவரை பந்தய சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
அதேபோல மரகதவல்லி கூறும் போது என்னை தாக்கிய மூன்று பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.