பிரபல ஆன்லைன் இசையமைப்பாளர் கொலை வழக்கில் சிக்கிய பெண் : கொடைக்கானல் லாட்ஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan3 December 2022, 12:57 pm
கொடைக்கானலில் ஆன்லைனில் இசையமைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்த தென்காசியை சேர்ந்த வாலிபர் கொலை பெண் உட்பட 5பேர் கைது
தென்காசியை சேர்ந்த சூர்யா (வயது 30) என்பவர் ஆன்லைனில் இசை அமைத்து இதனை வெளி நாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் வருவாய் ஈட்டி வருபவராக கூறப்படுகிறது.
சென்னையை சேர்ந்த சுவேதா (வயது 25). இவர் யோகா பயிற்சியாளராக உள்ளார். ஆன்லைனில் யோகா பயிற்சி நடத்தி வந்துள்ளார்.
இருவருக்கும் சமூக வலைதளங்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலில் இருவரும் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பிரிந்து இருந்தனர் .
சூர்யா மட்டும் கொடைக்கானல் கல்லுகுழி பகுதியில் கடந்த மூன்று மாதமாக தனியார் காட்டேஜில் வாடகைக்கு இருந்து தன்னுடைய music Composing பணியை செய்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு மீண்டும் வந்த யோகா பயிற்சியாளர் சுவேதா சூர்யாவை சந்தித்து உள்ளார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி சூர்யாவை சந்திக்க வந்த சுவேதாவிற்கும் சூர்யாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் சுவேதா தனது நண்பர்களை செல்போனில் அழைத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சுவேதாவின் நண்பர்களான கௌதம் , நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் , பரந்தக சோழன் , அகில் அகமது ஆகியோர் சூர்யாவிடம் சுவேதாவை தாக்கியதற்கான காரணங்களை கேட்கும் போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
அப்போது ஆத்திரம் அடைந்த சுவேதாவின் நண்பர்கள் உருட்டு கட்டையால் சூர்யாவை கண்மூடி தனமாக தாக்கியதில் நிலை தடுமாறி விழுந்த சூர்யாவை சில மணி நேரங்களுக்கு பிறகு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூர்யா ஏற்கனேவே உயிரிழந்ததாக கூறியதை அடுத்து மருத்துவர்கள் காவலர்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக சுவேதா உள்பட 5 பேரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் தனி தனியே விசாரணை நடைபெற்றது . இந்நிலையில் கொடைக்கானலுக்கு விரைந்த சூர்யாவின் பெற்றோர் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரம் அடைந்தது.
இதனால் திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆதாரங்களை திரட்டினர் . மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது .பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்ட சூரியாவிற்கு பல இடங்களில் உடலில் இரத்த காயங்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இதனால் சந்தேகத்திற்கு ஆன மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு சுவேதா உட்பட 5 பேரை கொடைக்கானல் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கொடைக்கானல் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .
0
0