காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கலி பறிப்பு… டிப்டாப் ஆசாமி கைவரிசை ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
7 March 2023, 11:36 am

திருவள்ளூர் : காய்கறி வாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை பொன்னேரி போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (43). நேற்று இரவு செங்குன்றம் அருகில் உள்ள பாடியநல்லூர் வீரகாளியம்மன் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய போது, பொன்னேரி அடுத்த சயனாவரம் சுதா என்பவரது காய்கறி கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் வேகமாக வந்து கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு வேகமாக பைக்கில் ஏறி சென்றுவிட்டார்.

இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த தகவலின்பேரில், போலீசார் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் ஆய்வு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த நகை பறிப்பு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!