தாத்தாக்களை டார்க்கெட் செய்யும் அழகிகள்… பேச்சால் சொக்கிப் போன 61 வயது நபர்… டிப்டாப்பாக சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
21 October 2022, 2:20 pm

கோவையில் அழகியின் பேச்சில் மயங்கிய 61 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் சித்ராவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் உதவியாளராக வேலை பார்த்து வந்த 61 வயது முதியவர் ஒருவருக்கு, கடந்த 16ம் தேதி ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. போனை எடுத்துப் பேசும் போது, எதிர்முனையில் பெண் ஒருவர் பேசியுள்ளார்.

போனில் பேசிய அந்தப் பெண், “உங்கள் வீட்டு பக்கத்தில்தான் வசித்து வருகிறேன். உங்களை அடிக்கடி பார்ப்பேன். நீங்க அவ்வளவு அழகு,” என அடுக்கடுக்காக வர்ணித்துள்ளார். பெண்ணின் வர்ணனையால் மயங்கிப் போன அந்த முதியவரோ, அந்தப் பெண்ணிடம் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்துள்ளார்.

cheating - updatenews360

பின்னர், திடீரென உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்றும், வரும் போது டிப்டாப் டிரெஸ் போட்டுக் கொண்டு, உங்களிடம் இருக்கும் நகைகளை அணிந்து விட்டு, ஜம்மு-னு வருமாறு கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட அந்த முதியவரும், துடியலூர் பக்கம் உள்ள கரடுமேடு பகுதிக்கு வரச் சொல்லியுள்ளார்.

சொன்னதைப் போல அந்தப் பெண் அங்கு நின்று கொண்டிருந்தார். முதியவரை பேசி பேசி, அப்படியே அருகே உள்ள பாழடைந்த பங்களாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இரு இளைஞர்களில் ஒருவர், தனது மனைவியிடம் என்ன செய்தி கொண்டிருக்கிறாய்..? எனக் கேட்டு கூப்பாடு போட்டுள்ளார்.

பின்னர், அந்தப் பெண்ணையும், முதியவரையும் நெருக்கமாக இருக்கச் செய்து புகைப்படம் ஒன்றை எடுத்து விட்டு, அவரிடம் இருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு முதியவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். நகையை பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல், அசிங்கப்பட்டதோடு, நேராக காவல்நிலையம் சென்று அவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பெண்ணையும், இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.

cheating - updatenews360

ஏற்கனவே, இதுபோன்று பார்லர் வைத்து நடத்தி வரும் ராஜி என்னும் அழகியிடம், 72 வயது தக்க முதியவர் ஒருவர் சலாபப்பட்டதால், பல லட்சத்தை இழந்துள்ளார். பியிட்டி பார்லரிடம் அழகியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!