முதலிரவு முடிந்தால் அவ்வளவுதான்.. ஆதார் கார்டால் வெளிவந்த உண்மை!
Author: Hariharasudhan28 December 2024, 1:46 pm
இதுவரை 6 பேரை திருமணம் செய்து மோசடி செய்த பெண் உள்பட இருவரை 7வது திருமணம் முடிக்க திட்டமிட்ட நபரால் போலீசார் தேடி வருகின்றனர்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர் உபாத்யாயா. இவர், திருமணத்திற்காக வரன் தேடி வந்துள்ளார். இதற்காக, விமலேஷ் வர்மா என்ற திருமணத் தரகரரிடம் கூறி இருந்துள்ளார். இந்த நிலையில், பூனம் என்ற பெண்ணின் புகைப்படத்தை தரகர் காண்பித்து இருக்கிறார்.
இதன்படி, பூனம் என்ற இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் அவர் கூறி உள்ளார். இதற்கு சங்கர் சம்மதம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து, சங்கரிடம் பூனம் மற்றும் அவரது தாயார் சஞ்சனா குப்தா அறிமுகமாகி உள்ளனர்.
இதனையடுத்து, சஞ்சனா குப்தா சங்கரிடம் திருமணம் செய்வதற்கு முன்பணம் கேட்டு உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சங்கர், முதலில் பூனம் மற்றும் சஞ்சனா குப்தாவின் ஆதார் கார்டு மற்றும் முக்கிய ஆவணங்கள் வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
எனவே, தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என சங்கர் கூறியுள்ளார். ஆனால், பணம் தராவிட்டால் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துவிடுவோம் என சஞ்சனா தரப்பில் மிரட்டல் விடுத்து உள்ளனர். எனவே, முந்திக்கொண்ட சங்கர், உடனடியாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இதையும் படிங்க: ரூ.13 ஆயிரம் சம்பளத்தில் பிரமாண்ட வாழ்க்கை.. லக்கி பாஸ்கருக்கே டஃப் கொடுத்த மும்பை மேன்!
இதன் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையின் அடிப்படையில், பூனம் இதுவரை 6 முறை திருமணம் செய்து, முதலிரவு முடிந்த பிறகு பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பூனம் மகளாகவும், சஞ்சனா குப்தா தாயாகவும் நடித்து இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. எனவே, இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.