பள்ளிக் காதலை கைவிட நினைத்த காதலன்.. ’அங்கேயே’ கட் செய்த காதலி.. திடுக்கிடும் பின்னணி!

Author: Hariharasudhan
23 December 2024, 6:43 pm

8 வருடக் காதலை விடுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலனின் பிறப்புறுப்பை காதலி அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர்நகரைச் சேர்ந்தவர் ஹீனா (22). இவர் அடேஷம் அகமது (24) என்பவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்து உள்ளார். ஆனால், அகமது, ஹீனாவுக்குத் தெரியாமல் திடீரென வீட்டில் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்ய தயாராகி உள்ளார்.

ஆனால், ஒருகட்டத்தில் இது குறித்து ஹீனாவுக்குத் தெரிய வந்து உள்ளது. எனவே, இறுதியாக உன்னிடம் பேச வேண்டும் என அகமதுவை விருந்தினர் இல்லத்திற்கு (Guest House) அழைத்து உள்ளார். இதன் பேரில், அங்கு சென்ற அகமது உடன் ஹீனா பேசிக் கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அகமதுவைத் தாக்கத் தொடங்கினார். அப்போது, அவரது பிறப்புறுப்பையும் அவர் அறுத்து உள்ளார். பின்னர், தன்னைத் தானே கொலை செய்ய நினைத்த ஹீனா, மணிக்கட்டை அதே ஆயுதத்தால் வெட்டி உள்ளார்.

A woman Chopped her boyfriend private part in UP

இதனால் இருவரும் வலியால் துடித்து உள்ளனர். பின்னர், ஹீனாவைக் காப்பாற்ற முயன்ற அகமது, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு மீரட் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதில், அகமதுவுக்கு குழந்தை பிறப்பதற்கான நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இதையும் படிங்க: திமுக செயல்பாடுகளுடன் முரண்பாடு இருக்கு.. அப்போ 25 தொகுதி? திருமாவளவனின் ப்ளான்!

அதேநேரம், ஹீனாவைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் காருக்குள் நடைபெற்றதாக அகமதுவும், கெஸ்ட் ஹவுஸில் நிகழ்ந்ததாக ஹீனாவும் கூறியுள்ளனர். மேலும், இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 36

    0

    0

    Leave a Reply