கோவையில் சென்னையை சேர்ந்த தாய், மகன், மகள் என மூன்று பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை துரைப்பாகம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் தனது கணவர், மகன் யுவராஜ் (16), மகள் ஜனனி (15) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்கள் முன்பு வரட்சுமியின் கணவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னையில் வழக்கு கொடுக்கப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருக்க முடியாமல் தவித்த வரலட்சுமி, கேரளாவுக்கு வேலை தேடி செல்வதாக கூறி, வீட்டில் இருந்து வெளியேறி, ரயிலில் தனது இரு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்துள்ளார். இந்த சூழலில், ரயில் பயணத்தின் போது, தங்கள் உடைமைகளை யாரோ திருடியதால் வேறு வழியின்றி கோவை போத்தனூர் பகுதியில் இறங்கியுள்ளார்.
மேலும் படிக்க: கல்விக்கடன் தள்ளுபடி… மாநிலங்களின் கையில் நீட்தேர்வு குறித்த அதிகாரம் ; தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்!!
பின்னர் உணவுக்கு கூட வழி இல்லாமல் தவித்த மூன்று பேரும் கையில் பணம் இல்லாமல் மிகுந்த துயரத்தில் இருந்துள்ளனர். இதை தொடர்ந்து, தண்டவாளத்தின் இரும்பு பாதையை பிடித்தவாறு கோவை இரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் நடக்கமுடியாமல் பசியால் வாடி, நஞ்சுண்டாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உணவு கேட்டு, அவர்கள் நேற்று காலை உணவு வழங்கியுள்ளனர்.
அதை தொடர்ந்து, அங்கேயே நீண்ட நேரம் இருந்த இவர்கள் மூன்று பேரும், மாலை திடீரென ரயில் தண்டவாளத்தின் ஓரமாக நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு பயணிகள் ரயில் வரும் போது மூன்று பேரும் ஒன்றாக ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்துள்ளனர்.
மேலும் படிக்க: சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக… பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை பார்ப்பதா..? கொந்தளிக்கும் அண்ணாமலை!!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்புத்தூர் இரும்புபாதை போலீசார் முன்று பேர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் மூன்று பேரும் கணவன் காணாமல் போனதால் இறந்தார்களா? இல்லை கடன் தொல்லையால் இறந்தார்களா ? இல்லை வேறு ஏதாவது காரணமா என கோயம்புத்தூர் இரும்பு பாதை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வரலட்சுமி, மகன் யுவராஜ், மகள் ஜனனி ஆகியோரை காணவில்லை என்று சென்னை துரைப்பாகம் காவல் நிலையத்தில் வரலட்சுமியின் சகோதரர் கடந்த 29ம் தேதி புகார் கொடுத்துள்ளார். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.