படுக்கை வரை வந்த முகநூல் நண்பர்.. குளிக்கச் சென்ற நேரத்தில் செய்த காரியம்!

Author: Hariharasudhan
30 November 2024, 3:00 pm

சென்னையில் தனிமையில் உறவில் இருந்த பெண்ணின் நகைகளைப் பறித்த முகநூல் நண்பர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை அடுத்த திருவிக நகரைச் சேர்ந்தவர் 54 வயதான பெண். இவர் கணவரைப் பிரிந்து தனது தாயுடன் வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முகநூல் மூலம் சிவா என்ற நபர் அறிமுகமாகி உள்ளார்.

இதனையடுத்து, இருவரும் செல்போன் எண்ணைப் பரிமாறி, பேசி வந்து உள்ளனர். இடையிடையே இருவரும் தனியாகச் சந்தித்து உள்ளனர். அந்த வகையில், நேற்று முன்தினம் காலை, முகநூல் நண்பரான சிவா அப்பெண்ணை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

அதற்கு அப்பெண்ணும் சம்மதம் தெரிவித்து உள்ளார். இதன் பேரில் பெண்ணின் வீட்டிற்கு சிவா வந்து உள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து இருவரும் தனிமையில், நெருக்கமாக உல்லாசமாக இருந்து உள்ளனர். இதனையடுத்து, லட்சுமி குளிப்பதற்காக தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி மேசையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்று உள்ளார்.

FB Man cheating in Chennai

தொடர்ந்து, குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, மேசையில் கழற்றி வைத்து இருந்த நான்கரை சவரன் மதிப்புள்ள செயின், ஒன்றரை சவரன் மதிப்புள்ள மற்றொரு செயின், ஒரு சவரன் வளையல் மற்றும் ஒரு சவரன் மோதிரம் உள்பட 8 சவரன் நகைகள் காணாமல் போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றினால் ரூ.1,000 அபராதம்.. ரயில்வே முக்கிய அறிவிப்பு!

இதனையடுத்து, அங்கு ஹாலில் அமர்ந்திருந்த சிவாவையும் காணவில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாமல் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை திருவிக நகர் காவல் நிலையத்தில் அப்பெண் இது குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிவாவின் முகநூல் கணக்குகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!