ஒரு கோடி ரூபாய் மதிப்பு இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக பாஜக மாநில செயலாளர் சூர்யாசிவா மீது திருச்சி காவல் ஆணையரிடத்தில் பெண் புகார் அளித்துள்ளார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் 3வது குறுக்கு சாலையில் சொந்தமாக ஏபிசி மண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது. இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் தனது நண்பரின் உறவினரான அத்தினா சூர்யா என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு மூன்று வருட கால வாடகைக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்துடன் பள்ளி நடத்துவதற்கான உரிமம் முடிவடைந்ததோடு, அவர்களோடு போட்டிருந்த வாடகை ஒப்பந்தமும் முடிவடைந்தது.
எனவே, ஆர்த்தி அத்தினா சூர்யாவிடம் உரிமம் முடிந்த நிலையில், கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில், 6 மாத வாடகையும் தராமல், அத்தினா சூர்யாவின் கணவர் பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூரிய சிவா பொறுப்பு வகிப்பதால், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை பள்ளி கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்ய முடியாது என்று கூறியதோடு அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அதோடு, சூர்யா சிவா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரிக்க நினைப்பதோடு அவற்றை தன்னுடைய பெயருக்கு ஐந்து வருட கால அவகாசத்தில் எழுதி தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டுவதாகவும், தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி ஆர்த்தி திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சூரியாசிவா மீது புகார் மனுவை அளித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.