‘ அதற்காக’ அழைத்த பெண்.. மறுத்த ஆணின் அந்தரங்க உறுப்பை வெட்டிய கொடூரம்!

Author: Hariharasudhan
12 December 2024, 11:29 am

உத்தரப் பிரதேசத்தில் உடலுறவு வைத்துக்கொள்ள அழைத்த பெண்ணிடம் மறுப்பு தெரிவித்த ஆணின் அந்தரங்க உறுப்பை பெண் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர், அந்த நபருக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த நிலையில், அந்தப் பெண் திடீரென அவரின் வீட்டிற்குள் நுழைந்து, தன்னுடன் உடலுறவு கொள்ள வர வேண்டும் என்று அவரை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்த நபர் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். அது மட்டுமின்றி, உடனடியாக அங்கு இருந்து புறப்படுமாறு கூறியுள்ளார்.

Woman cut man private part in UP police inquiry

ஆனால், அந்தப் பெண் விடாது அவரை இடைவிடாது வற்புறுத்திய உள்ளார். அப்போது, தனக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி எவ்வளவோ சொல்லி அவர் மறுத்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், அந்த நபரின் அந்தரங்க உறுப்பை அருகில் கிடந்த கத்தியால் வெட்டி உள்ளார்.

இதையும் படிங்க: விவாகரத்து அறிவித்த பிரபல இயக்குனர்.. ரஜினி பிறந்தநாளில் அதிர்ச்சி!

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. பின்னர், அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவருடைய உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், அவர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Woman cut man private part in UP as shocking incident

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இது தொடர்பாக காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்து உள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்தப் பெண், அந்த நபர் தான் தன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், அதனால் தான் ஆணுறுப்பை வெட்டியதாகவும் கூறியுள்ளார். எனவே போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Tamil cinema re-release movies ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!