பூனையால் துடித்துடிக்க உயிரிழந்த பெண்… வீதியில் இருந்த பாம்பை வீட்டுக்குள் விட்டதால் நடந்த பரிதாபம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 4:59 pm

பொள்ளாச்சி நேரு நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவி, இவருடைய மனைவி சாந்தி 58 வயது. கணவன் ரவி கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் சாந்தி தனது மகன் சந்தோஷ் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் வீட்டில் ஒரு பூனை குட்டியை ஆசையாக வளர்த்து வந்துள்ளார், இந்நிலையில் இவரது வீட்டுக்கு வெளியில் வளாகத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது பூனை பார்த்துள்ளது திடீரென அந்த பாம்பை பூனை பிடித்து வீட்டுக்குள் போட்டுள்ளது.

மேலும் படிக்க: மகா பாவம் செய்துவிட்டார்கள்.. முன்னரே புகார் கொடுத்தோம் : பகீர் கிளப்பிய முன்னாள் தலைமை அர்ச்சகர்!

அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சாந்தியை பாம்பு கடித்துள்ளது. பின்பு சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்துள்ளார்.

வீட்டில் செல்லமாக வளர்த்த பூனையை உயிருக்கு வினையான சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Ajith screamed after Vijay's dialogue.. INTERVAL scene from GOOD BAD UGLY leaked விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!