கரூரில் போதையில் சாலை ஓரத்தில் படுத்திருந்த இளம்பெண்ணை, போதை தலைக்கேரிய நிலையில் இருக்க அப்பெண்ணை அவரது கணவன் தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகரில் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கானோர் இங்கு வந்து செல்வது வழக்கம். இன்று சுதந்திர தினம் என்பதால் இப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ரவுண்டானா பகுதியில் கணவன், மனைவி போல் இருக்கும் அவர்கள் மது குடித்துள்ளனர்.
கணவன் ஓரளவிற்கு நிதானமாக இருக்கும் நிலையில், சுடிதார் அணிந்த அவரது மனைவி போதை தலைக்கேறியது. இதனால் நடக்க முடியாமல் அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் படிக்கட்டில் படுத்துக் கொண்டார். அவரை எழுப்பும் பணியில் அந்த இளம் பெண்ணுடன் வந்த கணவர் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணால் எழுந்திருக்க முடியாததால் அவரை தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசார்க்கும், 108 ஆம்புலன்ஸிற்கும் தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வந்து சுமார் அரை மணி நேரம் ஆகியும் அந்தப் பெண்ணை எழுப்ப முடியவில்லை. அந்தப் பெண்ணுடன் வந்தவர் அந்தப் பெண்ணை காலால் எட்டி உதைப்பது, மிதிப்பது, தூக்கிக் கொண்டு வந்து சாலையில் போட்டுவது போன்ற செய்கைகளை கரூர் மாநகர காவல் நிலைய போலீசாரின் முன்னிலையில் நடத்தினார்.
பலரும் அந்த ஆணை மிரட்டினார்கள், போலீசார் அவரை அப்பகுதியில் இருந்து தள்ளி விட்டனர். ஆனால், மீண்டும், மீண்டும் வந்து அப்பெண்ணை தாக்கினார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணே ஆம்புலன்ஸில் ஏறி தொப்பென்று ஸ்டெச்சரில் விழுந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவருக்கும் போதை தெளிந்தால் தான் உண்மை நிலவரம் என்னவென்று தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
டாஸ்மாக் விடுமுறை தினத்தில் இவர்களுக்கு மது எப்படி கிடைத்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
This website uses cookies.