அந்நியன் பட பாணியில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி : கடைக்கு சென்ற போது சோகம்.. உயிர் போனால்தான் நடவடிக்கையா? மக்கள் கொந்தளிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2022, 1:16 pm

சென்னை : மின்வாரிய துறையின் அலட்சியத்தால் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் 2வது தெருவில் செல்வம் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி உமாராணி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் அடை மழை விடாது பொழிந்து கொண்டிருப்பதால் சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தது. இந்த சாலையில் கடைக்கு சென்ற உமாராணி சாலையின் உள்ளே புதைந்திருந்த மின்சார கசிவின் மூலம் மின்சாரம் தாக்கி துடித்து கொண்டு இருக்கும் நிலையில் அவரை மீட்பதற்காக அவரது உறவினர்கள் அருகில் சென்று அவரது உடலை தொடும் போது அவர்களையும் மின்சாரம் தாக்கி உள்ள நிலையில் அவர்கள் விலகி சென்றுள்ளனர்.

இந்த சமயத்தில் அவரது கணவர் மூங்கில் கம்பின் மூலம் அவரை மீட்டெடுத்து அருகில் உள்ள உறவினர்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்.அங்கு அவர் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து உமாராணி உடல் அருகில் உள்ள மின் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் மழை நீரால் சம்பவம் நடந்த இடத்தில் மின் கசிவின் மூலம் மின்சாரம் லேசாக ஒரு சிலரை தாக்கியுள்ளதாக அப்பகுதி சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் புகார்கள் கொடுக்கப்பட்டும் அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ