வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து நூலிழையில் தப்பிய பெண் : எதிரே பைக்கில் வந்த கொள்ளையர்கள் எஸ்கேப்..ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2022, 9:46 pm

கன்னியாகுமரி : குளச்சல் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் கழுத்தில் கிடைந்த 11 சவரன் தங்க சங்கிலி அறுத்த முயன்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ளது காமராஜர் தெரு. இந்த தெருவில் வசிக்கும் பரிமளா என்கிற பெண் தனது இருசக்கர வாகனத்தில் வங்கி ஒன்றிற்கு செல்வதற்காக புறப்பட்டார்.

அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அறுக்க முயன்ற நிலையில் அந்த பெண் கிழே விழவே நகையும் கீழே விழுந்தன.

இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அந்த மர்ம நபர் நகையை எடுக்க வரவே அந்த பெண்ணும் அருகில் பார்த்து கொண்டிருந்தவர் ஒருவரும் அவர்களை விரட்டவே மர்ம நபர்கள் ஓடியதால் நகை தப்பியது .

பட்ட பகலில் காவல் நிலையம் அருகே நடந்த இந்த செயின் பறி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?