பேருந்தில் நடத்துநரை தாக்கிய பெண்… கைகலப்பில் முடிந்த வாக்குவாதம் ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 November 2022, 5:07 pm

சென்னை ; பெரம்பூரில் அரசு பேருந்து நடத்துனருக்கும் , பெண் பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை பெரம்பூர் பணிமனையை சேர்ந்தவர் செல்வகுமார் (47). இவர் நடத்துனராக உள்ளார். நேற்று காலை பிராட்வேயில் இருந்து பெரியார் நகர் நோக்கி செல்லும் தடம் எண் 42 என்ற பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

இந்த பேருந்தானது , கணேசபுரம் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றுக் கொண்டு புறப்படும் போது , புளியந்தோப்பு கன்னிகா புரத்தை சேர்ந்த அனிதா என்ற பெண்மணி மயிலாப்பூரில் உள்ள தான் பணி செய்யும் நிறுவனத்திற்கு செல்ல ஓடிவந்து பேருந்து ஏறியதால் நடத்துனர் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், பேருந்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேருந்து பெரம்பூர் பேருந்து நிலையம் வந்தவுடன் வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவருக்கு ஒருவர் கையால் தாக்கி கொண்டுள்ளனர்.

இது குறித்து அனிதா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கவே ரோந்து வாகனம் வந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்துள்ளனர். சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால் இந்த வீடியோ வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?