சேலத்தில் புதரில் நிர்வாணமாக இளம்பெண் சடலம் மீட்பு.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!
Author: Hariharasudhan3 December 2024, 7:48 pm
சேலத்தில் பூண்டு வியாபாரியிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் 43 வயதுடைய மனைவி, கடந்த நவம்பர் 25ஆம் தேதி காலை, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அப்பெண் வீடு திரும்பாததால் கணவர், மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால், அவரின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. எனவே, சேலம் தனியார் மருத்துவமனையில் விசாரித்து உள்ளனர். அப்போது, அப்பெண் மருத்துவமனைக்கு வரவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், நவம்பர் 27ஆம் தேதி சேலம் மாநகர துணை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதில், அப்பெண்ணிடம் கடைசியாக பேசியது கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சேர்ந்த பூண்டு வியாபாரி கனகராஜ் என்பதும், இவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, கனகராஜைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கனகராஜ் பூண்டு வியாபாரம் நிமித்தமாக அப்பெண்ணின் ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இருவரும் கடந்த 10 நாட்களாக செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் தான், நவம்பர் 25ஆம் தேதி, கோரிமேடு பகுதிக்கு காலை 10 மணிக்கு கனகராஜைப் பார்க்க அப்பெண் வந்துள்ளார்.
இதையும் படிங்க: மெத்தபெட்டமைன் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் போலீசார்.. என்ன நடந்தது?
பின்னர் அந்தப் பெண்ணை தனியாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதேநேரம், தன்னுடைய ரவுடி கூட்டாளியான கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை வரவழைத்து, இருவரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் பெண்ணின் தலையில் அடித்து மயக்கமடைய வைத்துள்ளனர். பின்னர் சக்திவேலும், கனகராஜூம் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து அவரின் உடலை முட்புதரில் நிர்வாண நிலையில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளத் தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில், பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல் மற்றும் கனகராஜ் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.