What a டெலிவரி.. பாக்- தென்னாப்பிரிக்கா போட்டியின் போது மைதானத்தில் பிறந்த குழந்தை!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2024, 6:32 pm

பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது ரசிகை ஒருவருக்கு மைதானத்தில் குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டியை விளையாடி தொடர்ந்து வெற்றி பெற்றது.

இதில் 3வது ஒருநாள் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.

அப்போது மைதானத்தில் உள்ள பெரிய திரையில், வாழ்த்துக்கள் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ரபெங் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர்களுக்கு மகன் பிறந்துள்ளான் என குறிப்பிட்டிருந்தது.

இதையும் படியுங்க: கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை கடித்த பாம்பு? டீன் விளக்கம்!

அப்போது தான், மைதானத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் குழந்தை பிறந்ததை அங்கு இருந்த அனைவரும் அறிந்துள்ளனர். இதையடுத்து கைத்தட்டிய ரசிகர்கள் அந்த ரசிகைக்கு வாழ்த்துகளை கூறினர்.

இதே போல போட்டி இடைவெளியின் போது ரசிகர் ஒருவர் தனது காதலியிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மோதிரத்தை மண்டியிட்டு கொடுத்து வேண்டுகோள் வைத்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி