கரூரில் கணவர் இறந்த பின்பு 10 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்த நபருடன் வீட்டில் தனியாக இருக்கும்போது ஏற்பட்ட தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அடுத்த அரசு காலனி தங்கராஜ் நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரூபிதா பானு (50). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் சிராஜுதீன் இறந்துவிட்டார். இவரது மகள் திருமணமாகி குடும்பத்தினருடன் வெளியூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில். கணவர் இறப்புக்கு பின் ராஜேந்திரன் (53 )என்ற நபருடன் கடந்த 10 ஆண்டுகளாக ரூபிதாபானு தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு ரூபிதா பானுவை சந்திக்க அவரது வீட்டிற்கு ராஜேந்திரன் வந்துள்ளார். அப்போது, இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பணம் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது.
இதில் ராஜேந்திரன், ரூபிதா பானுவை கீழே தள்ளி விட்டதாகவும், மூச்சுத்திணற அமுக்கியதோடு, கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதில் ரூபிதாபானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது சம்பந்தமாக தகவல் அறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் ராஜேந்திரனை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொலை செய்ய பயன்படுத்திய கட்டை மற்றும் துணியை போலீசார் எடுத்துச் சென்றனர்.
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
This website uses cookies.