லிப்டில் வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. எல்லை மீறிய வாலிபர் எஸ்கேப் : சென்னையில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2025, 1:08 pm
சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இன்று வழக்கம் போல் பணிக்கு வந்து நான்காவது பிளாக் கட்டடத்தில் உள்ள லிப்டில் அவர் சென்று கொண்டிருந்தார்.
இதையும் படியுங்க: பாலியல் வன்கெடுமைக்கு பலியான 80 வயது மூதாட்டி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!
அப்போது லிப்டில் உடன் பயணித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தால் பெண் கூச்சலிட்டு லிப்டை நிறுத்தினார்.
இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கூச்சலைக் கண்டு சக பெண் பணியாளர்கள் அந்த நபரை விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளனர்.

இருப்பினும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் நல சங்கத்திடம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சக பணிப்பெண்கள் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்காததால் வானகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலியல் அத்துமீறல் தொடர்பாகவும் லிப்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.