‘யாரு அதிகாரம் கொடுத்தது…?’ பெண் பத்திரிக்கையாளரை அவமதித்த காவலர் ; அமைச்சர் உதயநிதியிடம் செய்தி சேகரிக்கச் சென்ற போது அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
4 September 2023, 7:47 pm

அமைச்சர் உதயநிதியிடம் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிக்கையாளரை காவலர் அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்தக் கருத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காவல்நிலையங்களிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், முன்பை விட சனாதனத்தை அழிப்பதில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது இந்து அமைப்பினருக்கு எரியும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றியதைப் போல ஆகிவிட்டது.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்ப பத்திரிக்கையாளர்கள் முயன்றனர். அப்போது, ஆண் காவலர் ஒருவர் பெண் பத்திரிக்கையாளரின் ஒருவரின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த சக பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

https://twitter.com/i/status/1698649254334771628

அப்போது, கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அவ்வாறு செய்ததாக அந்த காவலர் பதிலளிக்கிறார். ஆனால், யார் உங்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது என்று செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0