அலுமினிய கடை ஓனரை டீலில் விட்ட பெண்.. கோவையை அதிரவைத்த சம்பவம்!

Author: Hariharasudhan
16 January 2025, 3:18 pm

கோவையில் அலுமினிய கடை உரிமையாளருடன் தொடர்பில் இருந்த பெண்ணை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள மகாலட்சுமிபுரம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர்கள் அருள் – கலைத்தாய் (33) தம்பதி. அருள் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கலைத்தாய், துடியலூர் பகுதியில் உள்ள ஒரு அலுமினியப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான, உருமாண்டம்பாளையம் எப்.சி.ஐ நகரைச் சேர்ந்த அரிச்சந்திரன் (44) என்பவருடன் கலைத்தாய்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியுள்ளது.

இதற்கு மத்தியில், அரிச்சந்திரனிடம் இருந்து கலைத்தாய் பணம் வாங்கி வந்ததாகத் தெரிகிறது. அந்த வகையில், சமீபத்தில் அரிச்சந்திரனிடம் கலைத்தாய் ரூ.2 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். ஆனால், அந்தப் பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை மேலும், இது குறித்து கேட்டபோது, அவர் சரியாக பதில் அளிக்காததுடன், திடீரென வேலையை விட்டும் நின்றுள்ளார்.

Woman Murder in Coimbatore over Extra Marital affair issue

மேலும், செல்போன் அழைப்பையும் ஏற்காமல் கலைத்தாய் இருந்துள்ளார். இதனிடையே, கலைத்தாய்க்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனால்தான் தன்னிடம் பேசவில்லை என்றும் நினைத்த அரிச்சந்திரன், கலைத்தாயை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

பின்னர், இது குறித்து தனது உறவினரான, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்த தீத்துவாசல் பட்டியைச் சேர்ந்த பிரசாந்த் (30) என்பவரிடம் கூறி உதவி கேட்டுள்ளார். இவ்வாறான சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கலைத்தாயின் மாமனார் இறந்துவிட்டார்.

எனவே, கலைத்தாய் தனது கணவருடன் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கிராமத்திற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், கலைத்தாய் மட்டும் கடந்த ஜனவரி 13ஆம் தேதி துடியலூருக்கு வந்துள்ளார். அப்போது, கலைத்தாய் தனியாக இருப்பதை அறிந்த அரிச்சந்திரன், பிரசாந்துடன் அங்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: 3 குழந்தைகளையும் விட்டுச் சென்ற மனைவி.. விடாது துரத்திய 5 பேர்.. கடைசியில் நேர்ந்த சோகம்!

பின்னர், அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்ட போது தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அரிச்சந்திரன், தனது உறவினருடன் சேர்ந்து கத்தியால் கலைத்தாயை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவருக்கு கழுத்து, தலை மற்றும் முகம் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்து வந்த துடியலூர் போலீசார், பெண்ணின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, அரிச்சந்திரன் மற்றும் பிரசாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

  • சன் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்..!
  • Leave a Reply