பெற்ற தாயையே கத்தியால் குத்திக் கொன்ற மகன்… சிறுசண்டையால் சின்னாபின்னமான குடும்பம்.. போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
24 April 2024, 11:13 am

தூத்துக்குடியில் பெற்ற தாயை கொன்ற மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வடக்கு விநாயகர் தெருவை சேர்ந்த ஞானதீபம். இவரது மனைவி புலோடில்லடா. இவர்களுக்கு ஸ்டாலின், ராஜா, ஜெயன், ஜான்சி எனும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். புலோடில்லடா தனது கணவரை விட்டு இரண்டாவது மகன் ராஜாவுடன் வசித்து வருகிறார். ஜெயின் இரவு நேர பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார்.

அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு வந்து பிரச்சனைகளை செய்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது தாயை சரமாரியாக குத்தி விட்டு ஜெயின் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

மேலும் படிக்க: ஒருநொடியில் நடந்த சம்பவம்… 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து வாய்க்காலில் பாய்ந்து விபத்து ; தஞ்சை அருகே நிகழ்ந்த சோகம்..!!

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாக காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஜெயினை தேடி வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 432

    0

    0