‘எந்த தொழில் செய்தால் என்ன…செய்யும் தொழில் தெய்வம்தானே’: டூவீலரை பிரித்தும் மேயும் மெக்கானிக் சிங்கப்பெண்…தஞ்சையில் சுவாரஸ்யம்..!!
Author: Rajesh23 March 2022, 4:26 pm
ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர் இல்லை என நிரூபித்து காட்டும் தஞ்சை பெண்மணி தஞ்சாவூர் மாதாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜெயராணி (36) கணவர் பெயர் அற்புதராஜ் (46) இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் (10) உள்ளார்.
அற்புதராஜ் டூவிலர் மெக்கானிக் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணத்தின் போது அற்புதராஜூக்கு விபத்து ஏற்பட்டு காலில் ஊனம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தான் செய்து கொண்டிருந்த டூவீலர் மெக்கானிக் கடையை கவனிக்க இயலாமல் போனது. இதனையடுத்து தான் செய்து வந்த டூவிலர் மெக்கானிக் தொழிலை தனது மனைவிக்கும் கற்று தந்தார். அவரது மனைவி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதை கற்றுக் கொண்டார்.
தற்போது மெக்கானிக் கடையை தானே திறம்பட நடத்தி பல்வேறு டூவீலர் மெக்கானிக் வேலைகளை செய்து கொடுத்து வருமானம் ஈட்டி வருகிறார். ஜெயராணி ஐடிஐ பிட்டர் படித்து கேரளாவில் நேவியில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். பின்னர் திருமணம் ஆனதும் தஞ்சைக்கு வந்து தனது கணவரின் தொழிலை தற்போது 8 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
இவரது தொழிலின் திறமையை பாராட்டி தஞ்சையில் தனியார் தொண்டு நிறுவனம் சக்தி விருதும், தனியார் பள்ளி சார்பில் சிங்கப் பெண் விருதும் வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளது, விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் சாதிக்கும் ஜெயராணியை பாராட்டுவோம்.