சாக்கடை கழிவுநீர் செல்வதில் தகராறு… உலக்கையால் அடித்து பெண் தற்கொலை ; பக்கத்து வீட்டுக்காரர் கைது..!!

Author: Babu Lakshmanan
3 February 2024, 1:03 pm

நிலக்கோட்டை அருகே உலக்கையால் அடித்து கூலித் தொழிலாளி பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை அருகே உள்ள சடையம்பட்டியைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவரின் மனைவி தமிழரசி (வயது 45). இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அழகர் மகன் கருப்பையா (வயது 35). தமிழரசி வீட்டில் இருந்து சாக்கடை கழிவுநீர் கருப்பையா வீட்டு பக்கம் அடிக்கடி சென்றதாக கூறப்படுகிறது. இதில் இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், காலையில் இருந்து இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த வாய் தகராறு முற்றவே வீட்டிலிருந்த உலக்கையை எடுத்து தமிழரசியின் தலையிலும் பல்வேறு இடங்களில் சரமாரியாக கருப்பையா தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த தமிழரசி உடனடியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இந்தப் படுகொலை குறித்து விளாம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ஷர்மிளா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளியை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், மதுரையில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, கருப்பையாவை கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?