வீட்டில் தனியாக இருந்த தாய்… பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பகீர் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
29 July 2023, 12:50 pm

கோவை ; கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியிலுள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41), இவர்களது மகள் கார்த்திகா +2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார்.

மகள் கார்த்திகாவை பள்ளியில் இருந்து, ஜெகதீஸ்வரி தினமும் மாலை 4.30 மணியளவில் அழைத்துச் செல்வார். நேற்று மாலை 4.30 மணி ஆகியும் அவர் அழைத்துச்செல்ல வரவில்லை. கார்த்திகா 5.30 மணி வரை காத்திருந்தும் தனது அம்மா வராததால், வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.

வீட்டின் படுக்கை அறையில் தனது தாயார் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கழுத்து நெறிக்கப்பட்டு ஜெகதீஸ்வரி இறந்திருக்கலாம் எனவும், 4 சவரன் தங்க சங்கிலி மற்றும் ஒரு பவுன் நகை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, உடலை மீட்ட போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரியின் கணவர் சக்கரவர்த்தி பேசும்போது , வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதாகவும், தன்னுடைய மகள் மாலை 6.30 மணிக்கு போன் செய்து அம்மா செத்துக்கிடப்பதாக தன்னிடம் தெரிவித்தார். மனைவி அணிந்திருந்த ஐந்து பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் கம்மல் திருடுபோயுள்ளதாக கூறினார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…