குழந்தை பாக்கியம் வேண்டி குறி கேட்டு வந்த இன்ஸ்டா அழகி.. நடுக்காட்டில் நடந்த உல்லாசம்… பூசாரி அரங்கேற்றிய நாடகம்!!
சேலம் மாவட்டம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்த 38 வயதாகும் பசவராஜ் என்பவருடைய மனைவி செல்வி. இவருக்கு 28 வயது ஆகிறது. பசவராஜ் பெங்களூருவில் தங்கி இருந்து கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
பசவராஜ் மற்றும் செல்வி தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. இதுவரை இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
குழந்தை பேறுக்காக கடந்த ஒரு ஆண்டாக செல்வி பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் பரிகாரம் செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த 15-ந் தேதி காலை செல்வி திடீரென மாயமானார். மனைவியை காணவில்லை என தாரமங்கலம் போலீசில் பசவராஜ் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் சேலம் தாரமங்கலம் போலீசார் செல்வியை தேடி வந்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, செல்வி பேருந்தி ஏறி, இரும்பாலை அருகேயுள்ள பெருமாள்பட்டியிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
அதையடுத்து போலீசார் அந்தக் கோயில் பகுதிக்கு நேற்று மாலை சென்று விசாரணை செய்ததில், அந்தக் கோயிலிலிருந்து 50 மீட்டர் தொலைவில் செல்வி மர்மமானமுறையில் இறந்துகிடந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
வாயில் நுரை தள்ளி விஷம் குடித்து இறந்ததுபோல் தெரிந்திருக்கிறது. மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையைக் காணவில்லை. அதனால் யாரேனும் அவரைக் கொலைசெய்துவிட்டு, நகையைத் திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டனர். பின்னர் செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் செல்வியுடன், பெருமாள்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயில் பூசாரியான பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்குப் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் பூசாரி குமாரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் செல்விக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலைசெய்ததை, அவர் ஒப்புக்கொண்டார். உடனே அவரைக் கைதுசெய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு குறி கேட்பதற்காக செல்வி சென்றிருக்கிறார். அப்போது பூசாரி குமாருடன், அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு முப்பதாயிரம் ரூபாய் பணத்தை பூசாரி குமாரிடமிருந்து செல்வி வாங்கியிருக்கிறார்.
அந்தப் பணத்துக்கு பெங்களூருவிலிருந்து தன்னுடைய கணவர் மூலம் குறைந்த விலைக்கு தங்கக்காசு வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், தங்கக்காசு வாங்கிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.
கடந்த 15-ம் தேதி கோயிலுக்கு வரும்படி செல்வியை குமார் அழைத்திருக்கிறார். அதன்படியே அவர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று குமார் கூறியிருக்கிறார். அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தனது பணத்தைத் திருப்பி தராமல், உறவுக்கு வர மறுத்ததால், குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து செல்வியைக் கொலைசெய்துவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை எடுத்துக்கொண்டு தப்பியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து போலீசார் பூசாரி மற்றும் அவரது கூட்டாளி ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.