‘ பெரிய பையனா இருந்தா வரமாட்டியா?’.. நடுரோட்டில் பெண் கொடூரமாக குத்திக் கொலை!

Author: Hariharasudhan
1 January 2025, 11:12 am

தென்காசி, சிவகிரியில் உல்லாசத்துக்கு இணங்க மறுத்த பெண்ணை, நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியில் உள்ள அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமேஸ்வரன். இவரது மனைவி பாஞ்சாலி (39). கணவரை இழந்த நிலையில், தனது மகன்கள் உடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாஞ்சாலி, சிவகிரி மெயின் ரோட்டில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த ஒருவர் பாஞ்சாலியிடம் தகராறு செய்துள்ளார். அது மட்டுமல்லாமல், பாஞ்சாலியை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பாஞ்சாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Sivagiri woman murder

மேலும், இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சமுத்திரவேல் (44) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், கணவரை விட்டு பிரிந்து வாழும் பாஞ்சாலிக்கும், சமுத்திரவேலுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ஒரு கட்டத்தில் பாஞ்சாலியை உல்லாசமாக இருக்குமாறு அழைத்துள்ளார்.

இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோர் OUT… 2026 தேர்தலில் திமுகவுக்கு பணியாற்றும் பிரபல நிறுவனம்!

ஆனால் அவர், தன்னுடைய மகன்கள் பெரியவர்களாகி விட்டதாகக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சமுத்திரவேல், பாஞ்சாலி கடைக்கு வந்தபோது, சரமாரியாக அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து, சமுத்திரவேலை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Sundar C favorite actress Soundarya பிரபல நடிகையை காதல் செய்த சுந்தர் சி…கெடுத்துவிட்ட குஷ்பூ…!
  • Views: - 119

    0

    0

    Leave a Reply