‘****தா பின்னிருவேன்’…. திருமண வீட்டாரை அசிங்கமாக திட்டிய பெண் காவலர்… மணக்கோலத்தில் மணமக்கள் போராட்டம்..!!!

Author: Babu Lakshmanan
26 February 2024, 8:15 pm

சென்னை அருகே திருமணத்திற்கு பேனர் வைத்த விவகாரத்தில், அதனை அகற்றச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் திருமண வீட்டாரை தகாத வார்த்தையில் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தினேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேஜா என்பவருக்கும் பட்டாபிராம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெருவதாக இருந்தது. எனவே. மணமக்களை வாழ்த்தி வரவேற்கும் விதமாக அவர்களின் நண்பர்கள் ஆங்காகே பேனர் வைத்துள்ளனர்.

அப்படி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். அப்போது, தினேஷ் தனது திருமணம் முடிந்தவுடன் பேனர்களை அகற்றி விடுகிறேன் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையினர் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்ததால், திருமண வீட்டாருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் மணமகன் தினேஷை காவல்துறையினர் வலுகட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதனால் மணப்பெண்ணும் காவல்துறையினரிடம் வாக்குவாததில் ஈடுபட்டார். சம்பவ இடத்தில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் வசந்தி திருமண வீட்டாரை பார்த்து தகாத வார்த்தைகளில் வசைபாடினார்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே காவல்துறையினர் அராஜக போக்குடன் நடந்து கொண்டதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வரவேற்பு நிகழ்ச்சியில் மணக் கோலத்தில் மணமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 260

    0

    0