பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி கைது… கோவில் திருவிழாவில் அத்துமீறியதால் அதிர்ச்சி..!!
Author: Babu Lakshmanan5 August 2023, 5:03 pm
சென்னை ; ராமாபுரத்தில் கோவில் திருவிழாவில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அருகே ராமாபுரம் திருவள்ளூர் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய திருவிழாவானது கடந்த 3 நாடகளாக நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதில் ராமாபுரம் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீமிதி திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருவிழாவில் பாதுகாப்பு ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலரிடம் கண்ணன் என்பவர் மது போதையில் தகாத முறையில் நடந்ததோடு பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், பெண் காவலர் அளித்த புகாரின் பெயரில் ராமாபுரம் போலீசார் திமுக கட்சியின் உறுப்பினரான கண்ணனை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கோவில் திருவிழாவில் பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கைதாகிய திமுக உறுப்பினரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெண் காவலரிடம் திமுக நிர்வாகி அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், மற்றொரு சம்பவம் ஆளும் திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.