கண்ணை மறைத்த பள்ளி பருவ காதல் : கணவனை பிரிந்து காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் : அரங்கேறிய கொடூரக் கொலை!!

Author: Babu Lakshmanan
31 January 2023, 5:50 pm

சென்னையில் கணவனை விட்டு பிரிந்து காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஆவடி வெள்ளாச்சேரியைச் சேர்ந்தவர் சுதா சந்தர் மற்றும் ராகவி. இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்த போதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு ராகவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவசர அவசரமாக வெளியில் மாப்பிள்ளை பார்த்து வசந்த் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில், தனது ஒன்றரை வயது குழந்தையை விட்டுவிட்டு வந்த ராகவியை அழைத்துச் சென்று புழல் அருகே சுதாசந்தர் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த சூழலில், புழல் விநாயகபுரம் அருகே ராகவியுடன் சென்று கொண்டிருந்த சுதாசந்தர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ராகவியின் சகோதரர் பரத் மற்றும் அவரது உறவினர் உதயா உள்ளிட்டோர் இந்த கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…