குடும்பத்தையே நாசம் பண்ணீட்டானுங்க.. விட மாட்டேன்… உணவகத்தின் உள்ளே கத்தியுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
24 March 2022, 4:14 pm

புதுச்சேரி : புதுச்சேரி அரவிந்த் ஆசிரம உணவகத்தில் பெண் ஒருவர் கத்தியுடன் உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே பிரசித்தி பெற்ற அரவிந்தர் ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் ஆசிரம வாசிகளுக்கான உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் இன்று காலை கத்தியுடன் ஒரு பெண் சென்றார். அங்கு, எனது குடும்பத்தை நாசம் பண்ணீட்டானுங்க என்று கூறி, அந்தப் பெண் ஆவேசமாக காணப்பட்டார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் உணவருந்த வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடை போலீசார், அங்கு சென்று கத்தியைக் கீழே போட சொன்னனர். ஆனால், அதனை கேட்க அந்தப் பெண் மறுத்தார். பிறகு, அந்தப் பெண்ணுக்கு பின்புறமாக வந்து, அவரிடம் இருந்த கத்தியை அகற்றினர்.

பின்னர், அந்த பெண்ணை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் ஆம்பூர் சாலையில் உள்ள தேனீர் கடையில் பணிபுரியும் மேரி என்பவரின் தாயார் விசாலாட்சி (45) என்றும் , அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதை அடுத்து வீசாலாட்சியை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து அவரை வெளியில் அனுப்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!