தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்… போதை ஆசாமிக்கு விழுந்த தர்மஅடி…!!
Author: Babu Lakshmanan16 January 2023, 8:12 pm
வேடசந்தூரில் தனியாக நின்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த மது போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிறுத்ததில் பெண் ஒருவர் வீட்டிற்கு செல்வதற்காக தனது சகோதரனை வர சொல்லிவிட்டு தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மரண போதை ஆசாமி ஒருவர் அந்தப் பெண்ணை வெகு நேரமாக நோட்டமிட்டுக்கொண்டே அருகில் சென்றுள்ளான். அந்த பெண் பயத்தில் நகர்ந்து நடந்து செல்ல.. பின் தொடர்ந்து சில்மிசம் செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது அவர் சப்தமிட்டு கூச்சலிட அங்கிருந்த பொதுமக்கள் என்னவென்று கேட்க, இந்த குடிகாரன் என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான் என்று கூற, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சராமாரியாக மாறி மாறி தாக்கிகொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த குடிகாரனை பொதுமக்களிடமிருந்து மீட்டு, யார் எந்த ஊர் என்றுகேட்டபோது, நான் மில்லில் வேலை பார்க்கிறேன், இந்த ஊர்ல தான் பொண்ணு கட்டிருக்கேன், அந்த ஊர்ல பொண்ணு கட்டியிருக்கேன், என்று முன்னுக்கு பின் முரணாக பேசிக் கொண்டிருந்தார்.
விசாரணையில் வேடசந்தூர் அருகே உள்ள V.அம்மாபட்டியைச் சேர்ந்த மாதவன் என்று தெரிவித்தான். பின்பு அவன் நிறை போதையில் இருப்பதால் காவலர்கள் அவனிடம் பெயர் மற்றும் முகவரி, செல்பேசி எண்களை வாங்கி, காலை காவல் நிலையம் வர வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இரவு நேரம் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து தாறுமாறாக அடி வாங்கிய மது போதை ஆசாமியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.