ஆம்னி பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்… சினிமா பாணியில் பேருந்தை துரத்திய உறவினர்கள் : தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan15 November 2023, 1:18 pm
ஆம்னி பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்… சினிமா பாணியில் பேருந்தை துரத்திய உறவினர்கள் : தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!
சென்னையில் இருந்து நேற்று இரவு திருநெல்வேலிக்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்னையில் இருந்து பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அதிகாலை ஒரு மணி அளவில் பேருந்து திண்டிவனம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தது. அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் குடித்துவிட்டு பேருந்தில் ஏறி வந்து கொண்டிருந்தனர். உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை 11 பேர் கொண்ட இந்த கும்பலில் இருவர் மட்டும் பெண் மீது தவறான கண்ணோட்டத்தில் பாலியல் சீண்டல் செய்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனை அடுத்து அந்தப் பெண் விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கவே அவரது உறவினர்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் பேருந்து நிற்காமல் செல்லவே ஆத்திரமடைந்த உறவினர்கள் சினிமா பட பாணியில் பேருந்தை இருசக்கர வாகனம் மூலம் எட்டு கிலோமீட்டர் துரத்தி விழுப்புரம் அடுத்த பிடாகம் என்ற இடத்தில் பேருந்தை தடுத்து நிறுத்தி அதில் இருந்த 11 நபர்களை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்து அந்த பேருந்து மற்றும் அதிலிருந்து அனைவரையும் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அனைவரையும் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலில் சீண்டலில் ஈடுபட்ட இருவரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மற்ற பேருந்தில் வந்த பயணிகளையும் பேருந்தையும் அனுப்பி வைத்தனர். இச்சம்பத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.