கத்திக்குத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்.ஐ : நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திர பாபு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 1:37 pm

நெல்லை : கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்ஐயை கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு பெண் காவலரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் நேற்று இரவு அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர். கோவில் கொடை விழா முடிந்த பிறகு அங்கு வைக்கட்டு இருந்த பேனர்களை அகற்றும் போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

வாக்கு வாதத்தின் போது ஆறுமுகம் திடீரென காவல் உதவி ஆய்வாளரை கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் மீது ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கைப் பதிவு செய்தது எஸ்.ஐ மார்க்கரேட் திரேஷாதான் என்று சொல்லப்படுகிறது.

இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ஆறுமுகம் கத்தியால் குத்தியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். மேலும் பெண் எஸ்.ஐ. மார்க்கரேட் திரேஷா-வுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும், சுத்தமல்லி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மார்க்கரெட் தெரேஷாவை, தமிழக காவல்துறை தலைவர் (D.G.P.) சி.சைலேந்திர பாபு, இன்று காலையில், நேரில் சந்தித்து, நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1145

    0

    0