ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஆத்திரமடைந்த மனைவி ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்த தம்பதியர்கள் கார்த்தி (36), செல்வராணி (33) ஆகிய இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கார்த்திக் கட்டிட கூலி தொழில் செய்து வரும் நிலையில், மனைவி செல்வராணியிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாகவும், தொடர்ந்து குடும்பத்தில் தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம்போல நேற்று இரவு கார்த்திக் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடுமையான முறையில் வாக்குவாதம் நடைபெற்றதாகவும், ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறி இருவருக்கும் சண்டை முற்றியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்து போன செல்வராணி அருகே உள்ள வாலாஜா ரோடு அம்மூர் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு யாரும் கவனிக்காத நேரம் பார்த்து, இன்று அதிகாலையில் சென்னை நோக்கி வந்த ஆலப்புழா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, ரயில்வே நிலையத்தில் இருந்த அதிகாரிகள் இது சம்பந்தமாக காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஆத்திரமடைந்த மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அம்மூர் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
This website uses cookies.